கோவையில் மாநாடு படம் திரையிடப்பட்ட தியேட்டரில் கோஷ்டி மோதல் - 8 பேர் கைது..!

இந்த தாக்குதலில் கெம்பட்டி காலணியைச் சேர்ந்த மகேஷ்வரன் மற்றும் கோட்டை மேட்டை சேர்ந்த முகமது நிஷார் ஆகிய 2 பேர் காயம் அடைந்தனர்.


கோவை: கோவையில் நடிகர் சிம்பு நடித்து திரையிடப்பட்ட தியேட்டரில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் காரணமாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் உள்ள ஒரு தியேட்டரில் நடிகர் சிம்பு நடித்த மாநாடு என்ற படம் திரையிடப்பட்டு உள்ளது. அங்கு, நேற்று முன்தினம் இரவுக் காட்சியின்போது ரசிகர்களில் சிலர் கைதட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.

இதனால் இடையூறு ஏற்படுவதாக கூறி ஒரு தரப்பினருக்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த இரு கோஷ்டியினரும் திடீரென்று மோதலில் ஈடுபட்டனர். அவர்கள், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இந்த தாக்குதலில் கெம்பட்டி காலணியைச் சேர்ந்த மகேஷ்வரன் (24), கோட்டை மேட்டை சேர்ந்த முகமது நிஷார் (20) ஆகிய 2 பேர் காயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், இது குறித்து தகவல் அறிந்த ரேஸ் கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருதரப்பினரை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...