ஒமிக்ரான் வைரசை தொற்றை கண்டறிய கோவை அரசு மருத்துவமனையில் 5,000 கிட் தயார்..! மருத்துவமனை முதல்வர் தகவல்..!

ஓமிக்ரான் என்கிற புதிய வைரஸ் உலகநாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த புதிய வைரஸ் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக உள்ளது.



கோவை: உலகையே அச்சுறுத்தும் புதிய வகை ஒமிக்ரான் வைரசை கண்டுபிடிப்பதற்காக கோவை அரசு மருத்துவமனையில் 5,000 டேக்பாத் கிட் (TaqPath) தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்தார்.

ஓமிக்ரான் என்கிற புதிய வைரஸ் உலகநாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த புதிய வைரஸ் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக உள்ளது.

இந்நிலையில், இந்த வைரசை கண்டுபிடிக்க தமிழகம் முழுவதும் 12 மருத்துவமனைகளில் ஆய்வக வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அதன்படி கோவை அரசு மருத்துவமனையில் உள்ள மைக்ரோ பயாலஜி ஆய்வக துறையில், ஏற்கனவே கொரோனா பரிசோதனை செய்யப்படும் ஆய்வகத்தில் ஒமிக்ரான் என்ற புதிய வகை வைரசை கண்டுபிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

5,000 டேக்பாத் கிட் (TaqPath) இது குறித்து கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறியதாவது:-

கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் ஆய்வகத்தில் ஏற்கனவே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக புதிய வகை வைரசை கண்டுபிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் டேக்பாத் (TaqPath) என்ற கிட் மூலம் பரிசோதனை செய்து முடிவுகள் அறிவிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதற்காக கோவை அரசு மருத்துவமனையில் 5 ஆயிரம் டேக்பாத் கிட் (TaqPath) தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

பொதுவாக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா வைரசில் 2 வகையில் பிரித்து மரபணுக்கள் எடுக்கப்படும். அதுவே டேக்பாத் கிட் (TaqPath) பரி சோதனையானது மரபணுக்களை 3 வகைகளாக பிரித்து பரிசோதிப்பது ஆகும், 3-வது வகை மரபணுவில் புதிய ஒமிக்ரான் அல்லது வேறு ஏதேனும் புது வைரஸ் உள்ளதா என்பது குறித்து கண்டறியலாம்.

தற்போது இதுவரை யாருக்கும் இந்த பரிசோதனை செய்யப்படவில்லை. தேவைப்படும் பட்சத்தில் பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மரபணுக்களைப் பிரித்து மட்டுமே இங்கு பரிசோதனை செய்யவும் முடியும். அது என்ன வகையான வைரஸ் என்பதை அறிய சென்னையில் உள்ள பொது சுகாதார ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...