நீலகிரியில் 2007ம் ஆண்டு ஐநூறு ரூபாய் லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை..!

2007ம் ஆண்டு நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் வருவாய் ஆய்வாளர் வாரிசுச் சான்றிதழ் வழங்க கூலித் தொழிலாளியிடம் 500 கையூட்டு பெற்ற வழக்கில் பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.


நீலகிரி: நீலகிரியில் கடந்த 2007ஆம் ஆண்டு ஐநூறு ரூபாய் லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனையும், 6000 ரூபாய் அபராதமும் விதித்து உதகை சார்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

கடந்த 2007ம் ஆண்டு நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தாண்டவ நடராஜன் வருவாய் ஆய்வாளர் வாரிசுச் சான்றிதழ் வழங்க கூலி தொழிலாளியிடம் 500 கையூட்டு பெற்றுள்ளார்.

இதில் கையூட்டு பெற்றதற்காக அவர் மேல் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை உதகையில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் கடந்த 14 ஆண்டுகளாக நடந்து வந்தது.

இன்று இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றபோது வாரிசுச் சான்றிதழ் கொடுப்பதற்கு கையூட்டாக 500 பெற்ற தாண்டவ நடராஜனுக்கு ஒன்பது ஆண்டுகள் சிறை தண்டனையும், 6000 ரூபாய் அபராதமும் விதித்து சார்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

வாரிசுச் சான்றிதழுக்காக 500 கையூட்டு பெற்ற இந்த வழக்கில் வழங்கப்பட்ட இத்தீர்ப்பு உதகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...