இந்த வழக்கில் பாலக்காடு மாவட்டம் நல்லபிள்ளி, நீலிப்பதனை சேர்ந்த டிரைவர் ராமகிருஷ்ணன் (39) கைது செய்யப்பட்டார்.
கோவை: கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
கேரளாவுக்கு லாரி ஒன்றில் அரிசி கடத்தப்படுவதாக, நேற்றிரவு மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் வைரம் தலைமையில், எஸ்.ஐ.,கவியரசு, எஸ்.எஸ்.ஐ., கதிரேசன், போலீஸ்காரர் குமரேசன் ஆகியோர், மதுக்கரை மரப்பாலம் அடுத்த பெட்ரோல் பங்க் அருகே, கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியே வந்த ஐஸர் 709 (பதிவெண் கே எல்.02. ஏ.பி..2350) லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, 10 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரிந்து, காவல் நிலையத்துக்கு லாரி கொண்டு செல்லப்பட்டது.
விசாரணையில் சுந்தராபுரம் பகுதியிலிருந்து, கஞ்சிக்கோட்டுக்கு கடத்திச் செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து, பாலக்காடு மாவட்டம், நல்லபிள்ளி, நீலிப்பதனை சேர்ந்த டிரைவர் ராமகிருஷ்ணன் (39) கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து, பொள்ளாச்சி குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தரப்பட்டது.