கோவை வடக்கு பகுதியில் உள்ள ஒட்டன் குட்டை நீர்நிலையில் முதல் பரிசல் பயணம்..!

கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் சுமார் 16 ஏக்கர் பரப்பளவிலான கீரநத்தம் ஒட்டன் குட்டை நிரம்பியதையடுத்து இங்கு பரிசல் பயணம் மேற்கொள்ளப்பட்டது.


கோவை: கோவை வடக்கு பகுதியில் உள்ள ஒட்டன் குட்டை நீர் நிலையில் முதல் பரிசல் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாவட்டம் வடக்கு பகுதியில் பல ஏரி, குளம், குட்டைகள் இருக்கிறது. இருப்பினும் பல ஆண்டுகளாக அவை தண்ணீரை இல்லாமல் வறட்சியான பகுதியாகவே காணப்படுகிறது.



இதற்கு அந்த பகுதியின் மிக முக்கிய மழைநீர் வடிகாலான கௌசிகா நதியின் நீர்வழிப்பாதைகளில் மழைநீர் வராததும் ஒன்று.

இத்தகைய நிலையில், கடந்த சில தினங்களாக பெய்த மழையில் சுமார் 16 ஏக்கர் பரப்பளவிலான கீரணத்தம் ஒட்டன் குட்டை நிரம்பியது. அதன் முழு கொள்ளவை எட்டி காலிங்கராயன் குளம் நோக்கியும் பயணித்தது.

வறட்சியான கோவை வடக்கு பகுதியில் நீர் நிரம்பிய ஒரு நீர்நிலையாக உள்ள ஒட்டன் குட்டையில், கௌசிகா நீர்கரங்கள் அமைப்பினரால் பரிசல் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தன்னார்வலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு இயற்கைக்கு மலர் தூவி நன்றி செலுத்தினர்.

கோவை வடக்கில் பரிசல் பயணம் செய்த முதல் நீர்நிலையாகவும் இது கருதப்படுகிறது. இதற்கான நீர் வழிப்பாதைகள் இடிகரை பேரூராட்சியில் அமைந்துள்ளது. அவற்றை முறையாக பராமரிக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் இந்த நீர்நிலை நிரம்பும் என்று ஊர் மக்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...