திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் நடைபெற்ற விஜய் மக்கள் இயக்கத்தின் உள்ளாட்சி தேர்தல் களப்பணி ஆலோசனை கூட்டத்தின் முடிவில் ரசிகர்கள் தேர்தலில் போட்டியிட விரும்ப மனு அளித்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ரசிகர்கள் ஆர்வமுடன் விருப்ப மனு அளித்து வருகின்றனர்.
திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் உள்ளாட்சி தேர்தல் களப்பணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலின் போது பொதுமக்களை அணுக வேண்டிய விதம் மற்றும் வார்டு வாரியாக நிர்வாகிகள் களப்பணி மேற்கொள்வது குறித்த ஆலோசனைநடைபெற்றது.
இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஏராளமான ரசிகர்கள் ஆர்வமுடன் விருப்ப மனுக்களை அளித்தனர்.
சமீபத்தில், தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் திமுக அமோக வெற்றிபெற்ற நிலையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்டவர்கள் 115 இடங்களில் வெற்றிபெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.