முதலமைச்சர் கோவை வருகை: மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ட்ரோன் கேமரா பறக்க தடை.!!

மாவட்டத்துக்கு உட்பட்ட எல்லைக்குள் ட்ரோன் கேமரா பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கோவை மாநகர காவல் துறை சார்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



கோவை: கோவையில் நாளை அரசு சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நாளை கோவை வருகிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோயம்புத்தூர் திருப்பூர் பகுதிகளில் 22, 23 ,ஆகிய தேதிகளில் அரசு விழாக்களில் கலந்து கொள்கிறார். இது தொடர்பாக கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட எல்லைக்குள் ட்ரோன் கேமரா பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கோவை மாநகர காவல் துறை சார்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கோவையில் நாளை காலை, 11.00 மணிக்கு வ.உ.சி., மைதானத்தில் நடக்கும் அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். நிகழ்ச்சி முடிந்ததும், திருப்பூரில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

இதன்பின், இரவு கோவையில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். 23-ம் தேதி காலை, 11.00 மணிக்கு கொடிசியா அரங்கில் நடக்கும் முன்னணி நிறுவனங்களின் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இதன்பின், தனி விமானத்தில் சென்னை செல்கிறார். கோவை மற்றும் திருப்பூருக்கு முதல்வர் ஸ்டாலின் வருவதையொட்டி விமானநிலையம், வ.உ.சி., மைதானத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...