பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி.!!

வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி உயிர் நீத்த விவசாயிகளுக்குப் பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.


கோவை: வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி உயிர் நீத்த விவசாயிகளுக்குப் பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாகப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மத்திய அரசு எடுத்த இந்த முடிவு காலதாமதமானது, இந்த போராட்டத்தின் போது 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

உயிர்நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகப் பொள்ளாச்சி தலைமை தொலைப்பேசி நிலையம் முன்பு கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் பகவதி தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி உயிர் நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மத்திய அரசு வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற்றிருந்தால் 700 உயிர்கள் போயிருக்காது. பிரதமர் மோடி அறிவிப்போடு நின்று விடாமல் நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடரிலேயே நீக்கி சட்டமாக இயற்ற வேண்டும்.

5 மாநில தேர்தலுக்குப் பயந்து வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டிய காங்கிரஸ் கட்சியினர் ஏழை எளிய நடுத்தர மக்களைப் பாதிக்கும் விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...