'கோவை விமான நிலையத்தில் அச்சுறுத்தும் தெரு நாய்கள்'- பயத்தில் பதுங்கி பதுங்கி செல்லும் பயணிகள்...!

கோயம்புத்தூர் விமான நிலைய வளாகத்திற்குள் சுற்றித்திரியும் தெருநாய்களின் தொல்லையால் பயணிகள் பயத்தில் நடமாடி வருகின்றனர். பயணிகளுக்கு உதவ விமான நிலைய நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை விரைவில் எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


கோவை: கோயம்புத்தூர் விமான நிலைய வளாகத்திற்குள் சுற்றித்திரியும் தெருநாய்களின் தொல்லையால் பயணிகள் பயத்தில் நடமாடி வருகின்றனர். பயணிகளுக்கு உதவ விமான நிலைய நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை விரைவில் எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொரோனா முடக்கத்திற்கு பிறகு கோவை விமான நிலையம் மீண்டும் விமான சேவைகளைத் தொடங்கியது. விமான நிலைய நிர்வாகம் பயணிகளுக்கும், அனுப்ப வருபவர்களுக்கும் பல்வேறு வசதிகளை செய்து தர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் சமீப நாட்களாக விமான நிலைய வளாகத்திற்குள் சுற்றித்திரியும் தெரு நாய்களால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

கோவை விமான நிலையம் அமைதியான விமான நிலையம் (Silent Airport) ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் எதுவும் வெளியாகாது. அதேசமயம் அங்கு சுற்றித்திரியும், தெருநாய்கள் தொடர்ந்து குரைக்கும் சத்தமும் சண்டையிடும் சத்தமும் விமான நிலையத்தையே சத்தமாக மாற்றுகிறது.

இவற்றின் சில படங்களை விமான ஆர்வலரான மாணவர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் வயதான பெண்மணியை நோக்கி நாய்கள் ஓடியதால் அவர் கீழே விழ முற்பட்ட சம்பவம் குறித்து குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவர், பயணிகளுக்கு உதவ விமான நிலைய நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை விரைவில் எடுக்க வேண்டும் என்றுத் கூறியிருந்தார்.

இதுகுறித்து கோவை சர்வதேச விமான நிலைய இயக்குனர் எஸ்.செந்தில் வளவன் கூறுகையில்,



விமான நிலையத்தில் நாய்கள் நடமாட்டம் இருப்பதாக பயணிகளிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன. கடந்த 3 மாதங்களாக இது தொடர்பாக அரசு அதிகாரிகள் மற்றும் கோவை மாநகராட்சி அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்து வருகிறோம்.

அருகில் குடியிருப்புகள் இருப்பதால், டெர்மினல் பகுதிக்கு அதிகளவில் நாய்கள் வருகின்றன. நாய்களுக்கு கருத்தடை மட்டுமே செய்யப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விலங்குகள் உரிமைக் குழுவின் கூற்றுப்படி, நாய்களை அவற்றின் இருப்பிடங்களில் விட வேண்டும். மேற்கண்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டு, நாங்கள் தொடர்ந்து கண்காணித்து, விமான நிலைய வளாகத்தில் உள்ள நாய்களை விரட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து, பயணிகள் வசதியாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிசெய்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து சிட்டிசன் வாய்ஸ் (சிவிசி), தலைவர், சி.எம். ஜெயராமன் கூறுகையில்,

விமான நிலையம் உட்பட அனைத்து இடங்களிலும் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுவதை மாநகராட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முன்பு மாடுகளால் இதுபோன்ற பிரச்னைகள் காணப்பட்டன. அதற்கு தீர்வு கிடைத்தது.

எனவே விமான நிலையத்தில் இதற்கு தீர்வு காணும் வகையில், விமான நிலைய வளாகத்தில் விக்கெட் வகை வாயில்களை அமைக்க விமான நிலைய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு வாயில்கள் வழியாக விலங்குகள் வராது. இது எங்களின் ஆலோசனை என்றார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...