கடத்தல் மற்றும் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள தன்னாசியப்பன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் அருண்குமார்(21). மணவறை அலங்கார வேலை செய்து வருகிறார்.
இவரும், பொள்ளாச்சியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து , அருண்குமார் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார்.
இது குறித்து சிறுமியின் தாய் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து, விசாரணை மேற்கொண்ட போலீசார் அருண்குமார் மீது கடத்தல் மற்றும் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.