நெகமம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!

நெகமம் அருகே 16-வயது சிறுமியைத் திருமணம் செய்த 20-வயது இளைஞர் போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.


பொள்ளாச்சி: நெகமம் அருகே 16-வயது சிறுமியைத் திருமணம் செய்த 20-வயது இளைஞர் போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சியை அடுத்த நெகமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார் (20). இவரும் நெகமம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16-வயது சிறுமியும் பழகியதாகத் தெரிகிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி ஆறு மாதங்களுக்கு முன்பு வினோத்குமார் சிறுமியைத் திருமணம் செய்துள்ளார்.

தற்போது சிறுமி 6-மாத கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் சிறுமி கர்ப்பம் குறித்து ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குப் பரிசோதனைக்குச் சென்றுள்ளார். அங்கே சிறுமியைப் பரிசோதித்த டாக்டர்கள், குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அங்கு விரைந்த அதிகாரிகள் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு 16-வயது என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், குழந்தைகள் திருமணத் தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து வினோத்குமாரை போலீசார் தேடி வந்தனர்.

இதனையடுத்து கோவில்பாளையம் பேருந்து நிலையம் அருகே வினோத்குமாரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...