புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் இன்று ஆய்வு மேற்கொண்டனர். மெய்நிகர் ஆய்வகம் அமைக்க அறிவுறுத்தப்பட்டது. பள்ளி குழந்தைகளுடன் மேயர் கலந்துரையாடினார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தின் கீழ் வரும் புளியகுளம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி பள்ளிகளில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் இன்று நேரடி ஆய்வு மேற்கொண்டார். வார்டு எண் 66-க்கு உட்பட்ட புளியகுளம் பகுதியில் செயல்படும் மாநகராட்சி வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் நேரில் சென்று பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தார்.

வெரினாடா உயர்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மேயர், மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்ப கல்வி வழங்குவதற்காக மெய்நிகர் (AR & VR LAB) ஆய்வகம் அமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த இந்த ஆய்வகம் பெரிதும் உதவும் என்று மேயர் தெரிவித்தார்.



அதனைத் தொடர்ந்து மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி வெரிவாடா ஆரம்பப் பள்ளிக்கு சென்று அங்குள்ள வசதிகளை ஆய்வு செய்தார். பள்ளியில் படிக்கும் குழந்தைகளுடன் நேரடியாக உரையாடி, அவர்களின் கல்வி தேவைகள் மற்றும் பள்ளி வசதிகள் குறித்து விசாரித்தார். குழந்தைகளின் நலன் சார்ந்த விஷயங்களை மேயர் கவனமாக கேட்டறிந்து, தேவையான மேம்பாடுகளை செய்ய உறுதியளித்தார்.



இந்த ஆய்வின்போது உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி, செயற்பொறியாளர் யோகசித்ரா(பொ), உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார்(பொ), உதவி நகர திட்டமிடுநர் சீனிவாசன், மாமன்ற உறுப்பினர் முனியம்மாள், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் கமலக்கண்ணன், சுகாதார ஆய்வாளர் ஜெ.யபார்வதி உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

மாநகராட்சி பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்துவதற்கும், நவீன வசதிகளை வழங்குவதற்கும் கோயம்புத்தூர் மாநகராட்சி தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வு அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...