கோவையில் பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும் - பி.ஆர் நடராஜன் எம்பி வலியுறுத்தல்..!

வழக்கின் விசாரணையில் உண்மை இருந்தால் தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்று பி.ஆர் நடராஜன் எம்பி வலியுறுத்தியுள்ளார்.



கோவை: கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கின் விசாரணையில் உண்மை இருந்தால் தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்று பி.ஆர் நடராஜன் எம்பி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்,

கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை எழுப்பி உள்ளதால் போக்சோவில் அந்த ஆசிரியரை கைது செய்துள்ளனர்.

மேலும், தலைமை ஆசிரியர் இந்த சம்பவத்தைப் பற்றி தெரிந்தபின்பும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையை விசாரித்த துணை ஆணையர், பள்ளியின் தலைமை ஆசிரியரும் மாணவியும் ஒரு மணி நேரம் பேசியுள்ளனர் என்றும், தொடர்ந்து பள்ளி மாணவியை டீசி வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல, பேச்சுவார்த்தையில் தலைமை ஆசிரியை 'இச்சம்பவம் பேருந்தில் செல்லும்போது நடப்பது போன்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்' என்று கூறப்படுகிறது. மாலை நேரத்தில் பள்ளிக்கு கவுன்சிலிங் என்று அழைத்துச் சென்ற மாணவியை மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். இந்த கவுன்சிலிங்கை பற்றி பெற்றோரிடம் சொல்லாதது குறிப்பிடத்தக்கது.

மேலும், கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து மாணவர்களிடமும், போராட்டக்காரர்களிடமும் பேச வேண்டும் என்றார். அமைச்சர்கள் அனைவரும் நேரில் வரவேண்டும் எனவும் உரிய உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மாணவியின் உடலைப் பெறுவது பெற்றோர் முடிவு என்று தெரிவித்த அவர், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விசாரணையில் உண்மை இருந்தால் தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...