கிணத்துக்கடவு அருகே கோதவாடி குளத்திற்கு வந்த பி.ஏ.பி தண்ணீரை மலர் தூவி வரவேற்ற விவசாயிகள்..!

கோதவாடி குளத்தில் தண்ணீர் தேங்கினால் குளத்தின் அருகில் விவசாயப் பணிகளும், குளத்தை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் பிரச்சனையும் தீரும் என தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கோதவாடி குளத்திற்கு வந்த பி.ஏ.பி தண்ணீரை விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.

கோவை கிணத்துக்கடவு அருகே கோதவாடி பகுதியில் கோதவாடிகுளம் உள்ளது. அண்மையில், பெய்த மழையால் இந்த குளத்திற்கு சிறிதளவு கூட தண்ணீர் வரவில்லை.

இந்த குளத்தில் தண்ணீர் தேங்கினால் குளத்தின் அருகில் விவசாய பணிகளும், குளத்தை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் பிரச்சனையும் தீரும்.

எனவே, புதர்மண்டி கிடந்த இந்த குளத்தை சீரமைக்க கோதவாடி குளம் பாதுகாப்பு அமைப்பு, தனியார் நிறுவனங்கள் மற்றும் குளம் அருகில் இருக்கும் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

கிணத்துக்கடவு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்ததால் கோதவாடி குளம் பாதுகாப்பு அமைப்பு மற்றும் விவசாயிகள் அரசியல் கட்சி பிரமுகர்கள் கோதவாடி ஊராட்சி நிர்வாகத்தினர் குளத்திற்கு பிஏபி வாய்க்காலில் தண்ணீர் திருப்பி விட வேண்டுமென தமிழக அரசிற்கும், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மெட்டுவாவி மற்றும் செட்டியக்காபாளையம் கிளை வாய்க்கால் வழியாகவும் பிஏபி தண்ணீர் கோதவாடி குளத்திற்கு திறந்து விடப்பட்டது.



பிஏபி வாய்க்காலில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று கோதவாடி குளத்தை வந்து அடைந்தது.



கோதவாடி குளத்திற்கு வந்த பி.ஏ.பி தண்ணீரை கோதவாடி பகுதி விவசாயிகள் மலர்தூவி வரவேற்று வணங்கினர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...