மக்களை நேரடியாக சந்தித்து மருத்துவம் மேற்கொள்ள, 56 நடமாடும் மருத்துவ வாகனங்களை அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கோவை: கோவையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 56 நடமாடும் மருத்துவ வாகனங்களை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கொடி அசைத்து இன்று துவங்கி வைத்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, கோவை மாநகராட்சியின் 100 வார்டுகள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் 50 இடங்கள் என மொத்தமாக 150 இடங்களில் மக்கள் சபை நடத்த திட்டமிடப்பட்டு இன்று வரை ஏராளமான மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்டம் சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மக்களை நேரடியாக சந்தித்து மருத்துவம் மேற்கொள்ள, 56 நடமாடும் மருத்துவ வாகனங்களை, மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கொடி அசைத்து இன்று துவக்கி வைத்தார்.
இத்திட்டமானது வடகிழக்கு பருவ மழையை எதிர் கொண்டு, மக்களை நேரடியாக சந்தித்து மருத்துவம் மேற்கொள்ளும் வகையில் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், இன்று காலை 8 மணி முதல் மாலை 8:30 மணி வரை கோவை பேரூராட்சிகள் (சூலூர், கருமத்தம்பட்டி, கண்ணம்பாளையம், அன்னூர், இடுகரை, பள்ளபாளையம், இருகூர், மோப்பிரிப்பாளையம், சர்க்கார்சாமக்குளம், பெரியதாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம்) மேற்கு, தெற்கு மற்றும் மத்தி மண்டலங்களில் மக்களை சந்திக்க உள்ளார்.