'மக்கள் சபை' நிகழ்ச்சி அனைவரும் பங்கேற்று குறைகளை நிவர்த்தி செய்ய நா.கார்த்திக் முன்னால் எம்.எல்.ஏ வேண்டுகோள்!

'மக்கள் சபை' நிகழ்ச்சியில், அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து, குறைகளை நிவர்த்தி செய்யப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நா.கார்த்திக் முன்னால் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கோவை: ''மக்கள் சபை'' நிகழ்ச்சியில், அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து, குறைகளை நிவர்த்தி செய்யப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நா.கார்த்திக் முன்னால் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக முதலமைச்சரின் மேலான ஆணைக்கிணங்க, தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி 'மக்கள் சபை' மூலமாக வருகின்ற 13.11.2021, 14.11.2021 மற்றும் 15.11.2021 அன்று பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெரும் நிகழ்ச்சியில், அனைத்து பொதுமக்களும் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து, குறைகளை நிவர்த்தி செய்யப் பயன்படுத்தி, பயன்பெற வேண்டும் என கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் முன்னால் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக முதலமைச்சரின் ஆணைக்கிணங்க,கோவை மாநகர் கிழக்கு மாவட்டம், சிங்காநல்லூர், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கீழ்க்கண்ட மாநகராட்சி பகுதிகளில், தங்களது பகுதிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், மழை நீர் வடிகால் (சாக்கடை), பாதாளச் சாக்கடை, பொதுக்கழிப்பிடம், தெருவிளக்கு, சுகாதாரம், திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, அரசு சான்றுகள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, மின்னணு குடும்ப அட்டை, மகளிர் குழு கடனுதவி, கல்விக்கடன், சுயதொழில் புரிய கடனுதவி, மருத்துவ காப்பீடு அட்டை வழங்குதல் தொடர்பான குறைகள் குறித்த கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் வகையில், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி “மக்கள் சபை“ மூலமாக வருகின்ற 13.11.2021, 14.11.2021 மற்றும் 15.11.2021 அன்று பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த 'மக்கள் சபை' நிகழ்ச்சியில், அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து, குறைகளை நிவர்த்தி செய்யப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் முன்னால் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

13.11.2021, சனிக்கிழமை மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை - வார்டுகள் 22,25,80,83,81

14.11.2021, ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.00 மணி முதல் 1.30 மணி வரை - வார்டுகள் 37 மற்றும் 56

15.11.2021, திங்கள்கிழமை மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை - வார்டுகள் 58,57,65,66,67,68,69,75,52,53

இந்த "மக்கள் சபை" நிகழ்ச்சியில், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிக்கழகப் பொறுப்பாளர்கள், வட்டக்கழகப் பொறுப்பாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் அனைவரும் ஒருங்கிணைந்து, பகுதிக்கழகப் பொறுப்பாளர்கள் தங்களது பகுதிக்குட்பட்ட வட்டக்கழகப் பொறுப்பாளர்களிடம் கலந்து பேசி, பொதுமக்களிடம், இந்த “மக்கள் சபை“ நிகழ்ச்சியினை சிறந்த முறையில் பயன்படுத்திப் பயன்பெறுவதற்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Newsletter

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...