எதிர்க்கட்சியாக செயல்படுவது போல் மாயையை ஏற்படுத்தும் பாஜக- ஈ.ஆர். ஈஸ்வரன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் பாஜக எதிர்க்கட்சியாகச் செயல்படுவது போல் மாயையை ஏற்படுத்தத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நினைப்பதாகக் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.


பொள்ளாச்சி: தமிழகத்தில் பாஜக எதிர்க்கட்சியாகச் செயல்படுவது போல் மாயையை ஏற்படுத்தத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நினைப்பதாகக் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.



பொள்ளாச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் தொழில் துறையினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கோவை மாவட்டச் செயலாளர் நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினருமான ER ஈஸ்வரன் கலந்துகொண்டார்.



பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் தாங்கள் எதிர்க்கட்சியாகச் செயல்படுவது போல் மாயையை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்து எந்தவிதமான ஆக்கப்பூர்வமான முயற்சிகளும் இல்லாமல் அறிக்கைகளைக் கொடுத்து, ஊடகங்களில் முக்கியத்துவம் பெற அண்ணாமலை முயற்சி செய்கிறார்.

முல்லைப் பெரியாறு அணை பற்றி தமிழக அரசுக்கு முழுமையாகத் தெரியும், நீர்வளத்துறை அமைச்சர் அனுபவம் கொண்டவர் கண்டிப்பாகத் தமிழகத்திற்கு ஆதரவான நிலை இருக்கும் என்பதில் சந்தேகமில்லை, அண்ணாமலை போன்றவர்கள் அவசர அவசரமாகச் செய்திகளை உருவாக்கி ஊடகங்களில் முக்கியத்துவம் பெற முயற்சிக்கிறார். கேரளாவினால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் வராது.

ஜெய் பீம் படம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளிக்கும் போது திரைத்துறையினர், எந்த சமுதாயத்தினரையும் புண்படுத்தாமல் திரைப்படம் எடுக்க வேண்டும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க அதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும், சிறிய அளவில் கூட மக்களின் மனம் புண்படும் வகையில் படம் எடுக்கக்கூடாது.

கடந்த அதிமுக ஆட்சியில் சென்னையில் கால்வாய்கள், ஏரிகள் தூர்வாரப்படாத காரணத்தினால்தான் தற்போது சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளது என்று குற்றம்சாட்டினார்.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...