கோவையில் தங்க நகை வியாபாரியிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணம் பறிமுதல்!

கோவை வடவள்ளி அருகே தங்க நகை வியாபாரியிடம் 2-கிலோ தங்கம், மற்றும் 7-லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் 3-பேரை கைது செய்த போலிசார் நகை, பணம் பறிமுதல் செய்தனர்.



கோவை: கோவை வடவள்ளி அருகே தங்க நகை வியாபாரியிடம் 2-கிலோ தங்கம், மற்றும் 7 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் 3-பேரை கைது செய்த போலிசார் நகை, பணம் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் சண்முகம் இவர் அங்கு உள்ள தங்க நகைக் கடைகளைத் தங்கத்தை பெற்று ஹால் மார்க் நகைகளாக மாற்றி கொடுக்கும் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 30-ஆம் தேதி சண்முகம் ஹால் மார்க் செய்த நகை மற்றும் பணத்துடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சண்முகத்தைத் தாக்கி 2-கிலோ தங்க நகை, 7-லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

இது தொடர்பாக, மாவட்ட எஸ்.பி.செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் வடவள்ளி போலிசார் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர். அப்போது வழக்கில் தொடர்புடைய பவானி சிங், அப்துல் ஹக்கீம், அஷ்ரப் அலி, உள்ளிட்ட 7-பேரை கைது செய்தனர்.



இந்நிலையில் கேரளா, கர்நாடக மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்திய போலிசார் பாஷா, சம்சுதீன், அன்பரசன் ஆகிய மூன்று பேரை போலிசார் கைது செய்து அவர்களிடமிருந்த 212 சவரன் தங்க நகைகள், 5.5 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.



முதல் கட்ட விசாரணையில் சண்முகம் ஹால்மார்க் செய்ய நகைகளை கொடுக்கும் கடையில் வேலை பார்த்து வந்த பவானி சிங், கோவை குண்டு வெடிப்பு குற்றவாளியான பாஜா என்கிற சிக்கந்தர் பாஷாவுடன் திட்டம் தீட்டி சண்முகத்திடம் நகை, பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது.



இதுகுறித்து மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் கூறும் போது:- கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பாஷா இப்போது காய்கறி கடை வைத்திருப்பதாகவும், பவானி சிங் கொடுத்த தகவல் அடிப்படையில் திட்டமிட்டு கொள்ளையை அறங்கேற்றியது தெரியவந்தது.

மேலும் அதிக பணம் நகைகளை எடுத்துச் செல்லும் வியாபாரிகள் போதிய பாதுகாப்பு இல்லாமல் இரு சக்கரங்களில் எடுத்து செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். தனிப்படை போலிசார் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு சென்று திறமையாக கையாண்டு 10-பேரை கைது செய்துள்ளனர். மேலும் 2-பேர் தலைமறைவாக உள்ளனர் என தெரிவித்தார்.



சிறப்பாக பணியாற்றி காவலர்களுக்கு ஐ.ஜி சுதாகர் பரிசு வழங்கி பாராட்டினார்.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...