10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஏ.சி மெக்கானிக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை: 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஏ.சி மெக்கானிக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவையைச் சேர்ந்த 14 வயது மாணவி இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் பிரசாந்த் 23, ஏசி மெக்கானிக் ஆக வேலை பார்த்து வருகிறார்.
இவர் அந்த மாணவியை ஒருதலையாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் தினமும் வீட்டு வாசலில் நின்றுகொண்டு பிரசாந்த் மாணவி பள்ளிக்குச் செல்லும் போதும் வரும்போதும் மாணவியிடம் தவறான செய்கைகளைக் காண்பித்து ஆபாசமாக நடந்து கொண்டதாகத் தெரிகிறது.
இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் பிரசாந்த் கண்டித்தனர். ஆனாலும் அவர் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். நாளுக்கு நாள் அதிகரித்ததால் மாணவி இந்த சம்பவம் குறித்து துடியலூர் போலீஸாரிடம் புகார் அளித்தார்.
பிரசாந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.