கோவையில் நெஞ்சில்‌ கூர்மையான ஆயுதத்தில் குத்திய நிலையில் வந்த நோயாளியின்‌ உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள் - குவியும் பாராட்டுகள்..!

நெஞ்சில்‌ கூர்மையான ஆயுதத்தில் குத்திய நிலையில் வந்த நோயாளியின்‌ உயிரை கோவை அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள்‌ வெற்றிகரமாகக் காப்பாற்றினர்.


கோவை: கோவையில் உயிருக்கு ஆபத்தான நிலையில், நெஞ்சில்‌ கூர்மையான ஆயுதத்தில் குத்திய நிலையில் வந்த நோயாளியின்‌ உயிரை கோவை அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள்‌ வெற்றிகரமாகக் காப்பாற்றி உள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ராஜாமில் ரோடு பகுதியை சேர்ந்த ஞானமுத்து கேத்திரினால்‌ வின்‌ வயது (53), இவரது கணவர்‌ பெயர்‌ லாரன்ஸ்.

இவர் கடந்த அக்டோபர் 20 அன்று காலை 11.21 மணியளவில்‌ கூர்மையான ஆயுதத்தினால்‌ நெஞ்சில்‌ ஏற்பட்ட காயங்களுடன்‌ கோவை அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையில்‌ ஆபத்தான நிலையில்‌ அனுமதிக்கப்பட்டார்‌.

இதையடுத்து, அவருக்குத் தேவையான பரிசோதனைகள்‌ எல்லாம்‌ செய்யப்பட்டு அவசர இருதய அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையில்‌ அவரது இருதய பகுதியில்‌ இருந்த கூர்மையான ஆயுதம்‌ எடுக்கப்பட்டது.

அப்போது, அந்த கூர்மையான ஆயுதம்‌, வலது பக்க இதயத்தைக் காயப்படுத்தி இருப்பதும், உதரவிதானம்‌ பகுதியில்‌ காயம்‌ ஏற்படுத்தி இருப்பதும்‌ மற்றும்‌ இதயத்தைச் சுற்றியுள்ள ஜவ்வு அறையில்‌ ஏறக்குறைய சுமார்‌ 300 ml இரத்தம்‌ இருப்பதும்‌ கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, இதயத்தில்‌ உள்ள காயம்‌, உதரவிதானத்தில்‌ உள்ள காயம்‌ ஆகியவை சரிசெய்யப்பட்டது. இதயத்தைச் சுற்றியுள்ள ஜவ்வு அறையில்‌ இருந்த சுமார்‌ 300 ml இரத்தம்‌ வெளியே எடுக்கப்பட்டது. இது உயிர்‌ காக்கும்‌ செயல்கள்‌ ஆகும்‌. இல்லையெனில்‌ நோயாளி இறந்து விடுவார்.

இந்த அறுவை சிகிச்சையானது மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர்‌ பேராசிரியர்‌ M. நிர்மலா., Ms., DGO அவர்கள்‌ முன்னிலையில்‌ கீழ்க்கண்ட மருத்துவக் குழு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்‌.



இந்த குழுவில், பேராசிரியர்‌ மயக்கவியல்‌ துறை தலைவர்‌ கல்யாண சுந்தரம்‌, இருதய அறுவை சிகிச்சை துறை இணை பேராசிரியர்‌ சிவன் ராஜ், இருதய அறுவை சிகிச்சை துறை உதவி பேராசிரியர்‌ முகமத்‌ மின்னதுல்லாஹ்‌, இருதய அறுவை சிகிச்சை துறை உதவி பேராசிரியர்‌ இளவரசன், இருதய அறுவை சிகிச்சை துறை உதவி பேராசிரியர்‌ அரவிந்த், மயக்கவியல்‌ உதவி பேராசிரியர்‌ சந்திரகலா, செவிலியர்கள்‌ பொற்கொடி மற்றும்‌ கிருத்திகா ஆகியோர்கள்‌ உள்ளனர்‌.

இந்த அறுவை சிகிச்சையானது முதல்வர்‌ காப்பீட்டுத் திட்டத்தின்‌ கீழ்‌ முற்றிலும்‌ இலவசமாக செய்யப்பட்டது. தற்போது நோயாளி நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...