வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த 7 காட்டு யானைகள் - பொதுமக்கள் அச்சம்..!

இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் காட்டு யானைக் கூட்டங்களை வனப்பகுதிக்கு விரட்டி நடவடிக்கை எடுத்தனர்.


கோவை: வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த 7 காட்டு யானைகளால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

வால்பாறை சுற்றியுள்ள தனியாருக்குச் சொந்தமான எஸ்டேட் தேயிலைத் தோட்டங்கள் அதிக அளவில் உள்ளன. இப்பகுதிகளில் பெரும்பாலான இடங்கள் ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியை ஒட்டி உள்ளது.



மேலும், கேரளா வனப்பகுதி எல்லை உள்ளதால் காட்டு யானை கூட்டங்கள் வனத்தைவிட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் புகுந்து நியாயவிலை கடைகளில் உள்ள ரேஷன் அரிசி சேதப்படுத்துகிறது.

இந்த நிலையில், நல்லமுடி, ஆனைமுடி பகுதிகளில் இரவு நேரத்தில் காட்டு யானை கூட்டம் புகுந்து ரேஷன் கடையை இடித்துத் தள்ளியது.

இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் காட்டு யானைக் கூட்டங்களை விரட்ட நடவடிக்கை எடுத்தனர். நள்ளிரவில் குடியிருப்பு பகுதிகளில் யானைக்கூட்டம் புகுந்தால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...