கோவையில் பாலியல் தொல்லையால் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை - மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பள்ளியில் ஆய்வு..!

பிளஸ் 2 பயிலும் 17 வயது மாணவிக்கு அப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்ததாக சக மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.



கோவை: கோவையில் பள்ளி மாணவி, பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கோவை உக்கடம் கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு பயிலும் 17 வயது மாணவி. இவர் நேற்று மாலை 5 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவர், கோவை RS புறத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் பயின்று வருகின்றார். கடந்த மாதம் பள்ளியிலிருந்து இந்த மாணவி நீக்கப்பட்டதாக 17 வயது மாணவி தோழிகள் இவருக்கு அலைபேசியில் பதிவு செய்தனர்.

மேலும், 17 வயது மாணவிக்கு அப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர், தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்ததாக சக மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பாலியல் தொல்லை காரணமாக உயிரிழந்த மாணவியின் உடலை மீட்ட உக்கடம் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், இது குறித்து R.S. அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, பள்ளியில் படிக்கும் மாணவிகளும் தாரணிக்கு சாதகமாக குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். தாரணியின் பெற்றோரும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் என் மகள் தற்கொலை செய்து கொண்டார் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று மாலை "ரீத்தா வின் தாத்தா, எலிசா சாருவின் தந்தை, மற்றும் தனது பள்ளி ஆசிரியரை தகாத வார்த்தையில் திட்டி யாரையும் சும்மா விடக்கூடாது" என வாக்குமூலம் எழுதிவைத்து விட்டு 17 வயது மாணவி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

முன்னதாக, தனது ஆண் நண்பரிடம், தான் முன்பு பயின்ற தனியார் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி தன்னை தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாகவும், அதனால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் மாணவி கூறியதாக, சக மாணவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மாணவியின் செல்போன், வாக்குமூல கடிதம் மற்றும் அவரது ஆண் நண்பரின் செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கடந்த 6 மாதத்துக்கு மேலாக மாணவி சோர்வாக அவ்வப்போது அழுதுகொண்டே இருந்ததாக மாணவியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பள்ளி தலைமையாசிரியை ஜெயலட்சுமி கூறுகையில்,

கடந்த செப்டம்பர் முதல்வாரத்தில் குடும்பத்தோடு மதுரைக்கு இடம்பெயர இருப்பதால், மாற்றுச்சான்றிதழ் கேட்டுள்ளனர். இரு நாட்களில் அவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் கொடுத்து விட்டதாகவும், அதற்கு பிறகு என்ன நடந்தது என தெரியவில்லை என்றார்.

மேலும், ஆசிரியர் மிதுன் குறித்து பேச மறுத்துவிட்டார். பள்ளி தாளாளரிடம் பேசாமல் எதுவும் பேச முடியாது என்றார். ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் மனைவியும் அதே பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். நடப்பாண்டில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி வகுப்பு எடுப்பதில்லை என அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கீதா பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு வருவதால் பள்ளி வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...