பிளஸ் 2 பயிலும் 17 வயது மாணவிக்கு அப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்ததாக சக மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை: கோவையில் பள்ளி மாணவி, பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கோவை உக்கடம் கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு பயிலும் 17 வயது மாணவி. இவர் நேற்று மாலை 5 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவர், கோவை RS புறத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் பயின்று வருகின்றார். கடந்த மாதம் பள்ளியிலிருந்து இந்த மாணவி நீக்கப்பட்டதாக 17 வயது மாணவி தோழிகள் இவருக்கு அலைபேசியில் பதிவு செய்தனர்.
மேலும், 17 வயது மாணவிக்கு அப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர், தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்ததாக சக மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாலியல் தொல்லை காரணமாக உயிரிழந்த மாணவியின் உடலை மீட்ட உக்கடம் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இது குறித்து R.S. அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, பள்ளியில் படிக்கும் மாணவிகளும் தாரணிக்கு சாதகமாக குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். தாரணியின் பெற்றோரும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் என் மகள் தற்கொலை செய்து கொண்டார் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று மாலை "ரீத்தா வின் தாத்தா, எலிசா சாருவின் தந்தை, மற்றும் தனது பள்ளி ஆசிரியரை தகாத வார்த்தையில் திட்டி யாரையும் சும்மா விடக்கூடாது" என வாக்குமூலம் எழுதிவைத்து விட்டு 17 வயது மாணவி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
முன்னதாக, தனது ஆண் நண்பரிடம், தான் முன்பு பயின்ற தனியார் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி தன்னை தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாகவும், அதனால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் மாணவி கூறியதாக, சக மாணவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மாணவியின் செல்போன், வாக்குமூல கடிதம் மற்றும் அவரது ஆண் நண்பரின் செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கடந்த 6 மாதத்துக்கு மேலாக மாணவி சோர்வாக அவ்வப்போது அழுதுகொண்டே இருந்ததாக மாணவியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பள்ளி தலைமையாசிரியை ஜெயலட்சுமி கூறுகையில்,
கடந்த செப்டம்பர் முதல்வாரத்தில் குடும்பத்தோடு மதுரைக்கு இடம்பெயர இருப்பதால், மாற்றுச்சான்றிதழ் கேட்டுள்ளனர். இரு நாட்களில் அவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் கொடுத்து விட்டதாகவும், அதற்கு பிறகு என்ன நடந்தது என தெரியவில்லை என்றார்.
மேலும், ஆசிரியர் மிதுன் குறித்து பேச மறுத்துவிட்டார். பள்ளி தாளாளரிடம் பேசாமல் எதுவும் பேச முடியாது என்றார். ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் மனைவியும் அதே பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். நடப்பாண்டில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி வகுப்பு எடுப்பதில்லை என அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கீதா பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு வருவதால் பள்ளி வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.