பொள்ளாச்சியில் முடிக்கப்படாத திட்ட பணிகள் விரைவில் முடிக்கப்படும்- சண்முகசுந்தரம் எம்.பி. உறுதி!

கடந்த 5-ஆண்டுகளாக முடிக்கப்படாத குளறுபடிகள் நிறைந்த பாதாள சாக்கடை திட்ட பணிகளை இரண்டு மாத காலத்திற்குள் தமிழக முதலமைச்சர் செயல்படுத்தி மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவார் என ஆய்வுக்குப் பின் பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் தெரிவித்தார்.


பொள்ளாச்சி: கடந்த 5-ஆண்டுகளாக முடிக்கப்படாத குளறுபடிகள் நிறைந்த பாதாள சாக்கடை திட்ட பணிகளை இரண்டு மாத காலத்திற்குள் தமிழக முதலமைச்சர் செயல்படுத்தி மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவார் என ஆய்வுக்குப் பின் பொள்ளாச்சி எம்.பி. தெரிவித்தார்.

பொள்ளாச்சி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் ரூ 109 கோடி செலவில் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. சந்தைப்பேட்டையில் ஒரு நாளைக்கு 1.2 கோடி லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் வகையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் முறையாகத் திட்டமிடப்படாததால் பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது.



இதனால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் சந்தைப்பேட்டையில் உள்ள சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.

பின்னர் அளித்த பேட்டியின்போது கடந்த அதிமுக ஆட்சியில் 2016ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 2019ஆம் ஆண்டு பணிகள் நிறைவு பெரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆட்சியில் செய்த குளறுபடிகள், சரிவரத் திட்டமிடாத பல்வேறு காரணமாக பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது.

வீட்டு இணைப்புகள் அதிகரித்ததன் காரணமாக 109-கோடியாக இருந்த நிதி தற்போது 170-கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

கடந்த காலத்தில் ஏற்பட்ட குளறுபடிகளை நீக்கி இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் 1.2 கோடி லிட்டர் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யும் வகையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொள்ளாச்சியில், கழிவுநீர், சுகாதார சீர்கேடு பிரச்சினைகள் முடிவுக்குக் கொண்டு வரத் தமிழக அரசு தமிழக முதலமைச்சர் உறுதியுடன் செயல்படுத்தி முடிவுக்குக் கொண்டு வருவார் என்றார்.

இந்த ஆய்வின்போது திமுக கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் உடனிருந்தார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...