கோவை ஐ.என்.எஸ். அக்ரானிக்கு தெற்கு கடற்படை கட்டளை அதிகாரி வருகை!

கோவையில் உள்ள ஐ.என்.எஸ். அக்ரானி தலைமை மற்றும் மேலாண்மை பயிற்சி நிறுவனத்திற்கு தெற்கு கடற்படைக் கட்டளை அதிகாரி ஏ.கே.சாவ்லா வருகை புரிந்தார்.


கோவை: கோவையில் உள்ள ஐ.என்.எஸ்.அக்ரானி தலைமை மற்றும் மேலாண்மை பயிற்சி நிறுவனத்திற்கு தெற்கு கடற்படைக் கட்டளை அதிகாரி ஏ.கே.சாவ்லா வருகை புரிந்தார்.

அப்போது அவர், மாலுமிகளின் கௌரவ மரியாதையைப் பெற்றுக் கொண்டதுடன், ஐ.என்.எஸ்.அக்ரானியின் உட்கட்டமைப்புகளை ஆய்வு செய்தார்.



பின்னர் அக்ரானியில் "நொய்யல்" மற்றும் "பழமுதிர் தோட்டம்" நிலைய கழிவு மேலாண்மை ஆலையைத் திறந்து வைத்தார்.

மேலும் இவர் பாதுகாப்பு சிவிலியன் ஊழியர்கள் உட்படக் கடற்படை வீரர்களுடன் உரையாடியதுடன் இந்தியக் கடற்படையின் மாலுமிகளுக்குத் தலைமைத்துவ மற்றும் மேலாண்மை திறன்களை வழங்குவது குறித்து எடுத்துரைத்தார்.



தெற்கு மண்டல கடற்படை மனைவிகள் நலச்சங்கத் தலைவர் சபனா சாவ்லா, கடற்படை அதிகாரிகள் குடியிருப்பில் "ஓயாசிஸ்" என்ற ஆரோக்கிய பூங்காவைத் திறந்து வைத்ததுடன் நிலையத்தின் அனைத்து பெண்களுடனும் உரையாடினார்.

Newsletter

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...