கோவையில் திருநங்கையிடம் பாலியல் அத்துமீறல் செய்த காவலர் பணியிடை நீக்கம்..!

கோவை, பாப்பநாயக்கன் பாளையத்தைச் சோ்ந்த திருநங்கையான உமாஸ்ரீயிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


கோவை: கோவையில் திருநங்கையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காவலா்பணியிடை இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

கோவை, பாப்பநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த உமாஸ்ரீ (30). திருநங்கையான இவா் தனியாா் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், இவரது செல்ஃபோன் சில நாள்களுக்கு முன்பு காணாமல் போனது. இது குறித்து அவா் ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவலா் மூவேந்தன் வேல்பாரி (50) என்பவா் விசாரித்தாா். திருட்டு குறித்து விசாரிப்பதற்காக திருநங்கையின் வீட்டுக்குச் சென்ற அவா், அவரிடம் தகாத வாா்த்தைகளில் பேசியது மட்டுமல்லாமல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அவா் ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் சம்பந்தப்பட்ட காவலா் மீது ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மேலும் அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக மாவட்ட காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...