கடந்த வாரம் காரமடை அருகே ஆதி மாதனூர் பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை 2 கன்றுக் குட்டிகளை அடித்துக் கொன்றது.
கோவை: கோவை காரமடை அருகே அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை கண்காணிக்க 4 புதிய கேமராக்கள் வனத்துறையினரால் பொருத்தப்பட்டது.
கோவை அருகே உள்ள ஆதி மாதனூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை 2 கன்றுக் குட்டிகளை அடித்துக் கொன்றது.
மேலும், அதே பகுதியில் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டியை தாக்கியுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பீதி அடைந்தனர். பின்னர், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை சார்பில் 4 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில்:-
கடந்த வாரம் இப்பகுதியில் இரண்டு கன்றுக் குட்டிகள் மற்றும் வளர்ப்பு நாயை சிறுத்தை தாக்கி கொன்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய அந்த பகுதியில் 4 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டால் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.