கோவையில் இன்று நடைபெற இருந்த தடகளப் போட்டிகள் மழை காரணமாக 16ம் தேதிக்கு மாற்றம் - கோவை மாவட்ட தடகள சங்கம் அறிவிப்பு..!

தற்போது தொடர் மழை பெய்து வருவதால் தடகளப் போட்டிகள் நடைபெறும் தேதி வருகிற 16ம் தேதி மற்றும் 17ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் இந்த போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் இன்று நடைபெற இருந்த தடகளப் போட்டிகள் மழையின் காரணமாக வருகிற 16ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தடகள சங்க நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்ட அளவில் ஜூனியர் தடகளப் போட்டிகள் இன்று (9ம் தேதி) செவ்வாய்க்கிழமை, நாளை (10ம் தேதி) புதன்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கோவையில் தற்போது மழை பெய்து வருவதால் தடகளப் போட்டிகள் நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, வருகிற 16ம் தேதி மற்றும் 17ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் இந்த தடகளப் போட்டிகள் நடைபெறும்.

இந்த போட்டியில் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் கலந்துகொள்ளலாம். ஆண் பெண் இருவருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படும்.

இப்போட்டியில் கலந்துகொள்பவர்கள் 12, 14, 16, 18, 20, ஆகிய வயதுக்கு உட்பட்டவர்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.

மேலும், போட்டியில் வெற்றி பெறும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என்று கோவை மாவட்ட தடகள சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...