பொள்ளாச்சியில் மூதாட்டியிடம் 11-பவுன் நகை பறிப்பு: தம்பதியினர் கைது!

கரிய காளியம்மன் வீதி அருகே கடன் தொல்லையால் ஒரே தெருவில் வசிக்கும் தம்பதியினர் மூதாட்டியை தாக்கி 11-பவுன் நகையை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தம்பதியினரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


பொள்ளாச்சி: கரிய காளியம்மன் வீதி அருகே கடன் தொல்லையால் ஒரே தெருவில் வசிக்கும் தம்பதியினர் மூதாட்டியை தாக்கி 11-பவுன் நகையை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தம்பதியினரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சி கரியகாளியம்மன் வீதியைச் சேர்ந்தவர் மூதாட்டி ஜெயலட்சுமி (76). கடந்த 2-ஆம் தேதி மூதாட்டி தனியாக வீட்டில் இருக்கும் சமயத்தில் இளைஞர் ஒருவர் இளம் பெண்ணுடன் சேர்ந்து மூதாட்டியைத் தாக்கி விட்டு அவர் அணிந்திருந்த 11-பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு சென்றனர்.

இதுகுறித்து ஜெயலட்சுமியின் மகன் சங்கரேஸ்வரன் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில், போலீசார் நேற்று முன்தினம் மோதிரம் புரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமான இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் கரியகாளியம்மன் வீதியைச் சேர்ந்த தம்பதியினரான சஞ்சய் (21), சுருதி (20) என்பது தெரிய வந்தது.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கடன் தொல்லையால் சஞ்சய் மற்றும் சுருதி ஆகிய இருவரும் அதே வீதியில் வசிக்கும் மூதாட்டி ஜெயலட்சுமியை தாக்கி கொள்ளையில் ஈடுபட்டதும் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் தம்பதியினரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...