கோவையில் விபத்தில் சிக்கி ஓய்விலிருந்த போலீஸ் ஏட்டு சாவு.!

கடந்த 2003-ம் ஆண்டு திருச்சியில் பணிபுரிந்த போது விபத்தில் சிக்கி மூளை நரம்பு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில், திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: கடந்த 2003-ம் ஆண்டு திருச்சியில் பணிபுரிந்த போது விபத்தில் சிக்கி மூளை நரம்பு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில், திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே போலீஸ் ஏட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் கார்த்திக் 44, இவர் குடும்பத்துடன் காந்திபுரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

கார்த்திக் கடந்த 2003-ம் ஆண்டு திருச்சியில் பணிபுரிந்த போது ஒரு விபத்தில் சிக்கினார். இதில் அவரது மூளை நரம்பு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் குணமடைந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டுக் கடந்த ஒரு வாரமாக அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.

நேற்று வீட்டிலிருந்த அவருக்கு திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. வாய் மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...