திருப்பூரில் தொழில் தொடங்குவதாக பல்வேறு நபர்களிடம் 3-கோடியே 63-லட்சம் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் தொழில் தொடங்குவதாக பல்வேறு நபர்களிடம் 3-கோடியே 63-லட்சம் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வசித்து வரும் ராக்கம்மாள் என்பவர் தனது கணவர் காசிநாதன் மற்றும் உறவினர்கள் லோகேஷ் குமார், சக்திவேல் ஆகியோருடன் பல்லடத்தில் ரியல் எஸ்டேட், தறி இயந்திரம் வாங்குதல் விற்றல் மற்றும் ஏலச்சீட்டு நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தொழில் நடத்தி அப்பகுதியில் பொதுமக்களிடம் சகஜமாகப் பழகி வந்துள்ளனர்.
இதனால் தொழிலை விரிவுபடுத்துவதாக அப்பகுதியில் பல்வேறு நபர்களிடம் சுமார் 3 கோடியே 63 லட்சம் வரை கடன் பெற்று அதைத் திருப்பித் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

மேலும் நால்வரும் கூட்டாகச் சேர்ந்து தங்களிடம் பெற்ற கடன் தொகையைத் திருப்பித் தராமல் மோசடியில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில், தங்களது பணத்தைத் திரும்பப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்க வந்திருந்தனர்.
அப்போது அலுவலகத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் நேரடியாகப் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டு விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொதுமக்களிடம் உறுதியளித்தார்.