பொள்ளாச்சி நகராட்சியில் குத்தகைதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சார் ஆட்சியரிடம் திமுகவினர் மனு..!

நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள இலவச கழிப்பிடத்தை குத்தகைதாரர்கள் சுயநலத்திற்காக பூட்டிவைத்து உள்ளனர். இதனால் வியாபாரிகள், வெளியூர் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி நகராட்சியில் குத்தகைதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சார் ஆட்சியரிடம் திமுகவினர் மனு அளித்தனர்.

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட மாட்டுச்சந்தை, காந்தி வாரசந்தை, தினசரி காய்கறி சந்தை மற்றும் பேருந்து நிலைய பகுதிகளில் அமைந்துள்ள கட்டண கழிப்பிடம் மூலமாக குத்தகை அடிப்படையில் நகராட்சிக்கு வருவாய் வருகிறது.

மேலும், மாட்டு சந்தையில் மாடு ஒன்றுக்கு அரசு நிர்ணயித்துள்ள விலையை விட அதிக வசூல் செய்தும் ரசீது வழங்குவது இல்லை. காய்கறி சந்தை நுழைவு வாயிலில் பொதுமக்கள், வியாபாரிகள் வரும் இருசக்கரம், நான்கு சக்கரம், லாரி, மினி ஆட்டோ மற்றும் சுங்க வசூலும் அரசு விதிமுறைமீறி கடைகள் அமைக்கப்பட்டும், பழைய, புதிய பேருந்து நிலையங்களில் உள்ள இரு கட்டண கழிப்பிடத்தில் நகராட்சி நிர்ணயித்த ரூ.1க்கு பதில் ரூ 5 வசூல் செய்கின்றனர்.

நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள இலவச கழிப்பிடத்தை குத்தகைதாரர்கள் சுயநலத்திற்காக பூட்டிவைத்து உள்ளனர், இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், வெளியூர் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனால் தி.மு.க ஆட்சிக்கு அவப்பெயர் உண்டாகிறது.

இந்த நிலையில், தனியார் குத்தகைதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சார் ஆட்சியரிடம் மாவட்ட பிரதிநிதி தர்மராஜ் தலைமையில் மனு அளித்தனர்.



இதில் CTC ஆயி மூர்த்தி, திப்பம்பட்டி ஆறுச்சாமி, மாணிக்க ராஜ், நவநீத கிருஷ்ணன், தர்மராஜ், கண்ணுச்சாமி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...