கோவை பேரூர், தொண்டாமுத்தூர், கரும்பு கடை சுற்றுப்புறத்தில் வாழும் மக்கள் வீட்டுமனைப்பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு கிராமத்தில் வீட்டு மனை மற்றும் இடம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியரிடம் பேரூர், தொண்டாமுத்தூர், குனியமுத்தூர்.. மற்றும் கரும்பு கடை சுற்றுப்புறத்தில் வாழுகின்ற மக்கள் வீட்டுமனைப்பட்டா வழங்கக் கோரி மனு அளித்துள்ளனர்.



மக்கள் குறைதீர்க்கும் நாளான இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பேரூர் வட்டம், தொண்டாமுத்தூர், குனியமுத்தூர் மற்றும் கரும்பு கடை சுற்றுப்புறத்தில் உள்ள மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மனு அளித்தனர்.

அந்த மனுவில், நாங்கள் தினக் கூலி வேலை செய்பவர்கள் என்றும் அதனால் நாங்கள் வருமானமின்றி வாழ்வதாகவும். வீடுகள் இன்றி தொடர்ந்து தவித்து வருவதாகவும் இதனால், பெரிதும் தங்கள் குடும்பம் பாதிக்கப்படுவதாகவும் கூறியவர்கள், வீட்டுமனை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.



எனவே, இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு கிராமத்தில் வீட்டு மனை மற்றும் இடம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...