புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வரும் 11ம் தேதி கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
கோவை: புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வரும் 11ம் தேதி கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின், தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:-
தமிழகத்தின் வடமாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய கடலோர பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இவற்றின் காரணமாக, சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில், இன்று கன முதல் மிக கனமழை வரை பெய்யும். புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சி, நீலகிரி, கோவை, கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
வரும், 11ம் தேதி வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய உள் மாவட்டங்களில், மிக கனமழையும், சில நேரங்களில் அதி கனமழையும் பெய்யும்.
நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் கடலோரம் அல்லாத மாவட்டங்களில் கனமழை பெய்யும். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில், நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இதனால், ஆழ்கடலில் மீன் பிடிக்கும் மீனவர்கள், நாளைக்குள் கரைக்கு திரும்பி விட வேண்டும்.காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய ஆந்திர கடலோர பகுதிகள், வடக்கு கடலோர பகுதிகளில் இன்றும்; தெற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடலோர பகுதிகளில் நாளையும் மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.
தமிழக கடலோர பகுதிகள், குமரி கடல், மன்னார் வளைகுடா, ஆந்திர கடலோர பகுதிகள், தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வரும், 10, 11ம் தேதிகளில் மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும்.குறிப்பிட்ட நாட்களில், மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.