வால்பாறையில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பள்ளிக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் அவதி..!

பின்னர், அதே வழியில் வேறு எஸ்டேட்டில் இருந்து வந்த பேருந்தில் பள்ளி மாணவிகளை ஏற்றி, இட நெரிசலில் பேருந்தில் ஏற்றி வரப்பட்டனர்.


கோவை: வால்பாறையில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பள்ளிக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 62 எஸ்டேட்டுகள் உள்ளன. வால்பாறையில் இருந்து எஸ்டேட் பகுதிகளுக்கு சுமார் 30 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், இன்று காலை சேக்கல் முடி எஸ்டேட் பகுதியில் இருந்து 7 மணிக்கு புறப்பட்டு வால்பாறைக்கு 8.30 மணி அளவில் பேருந்து வந்து சேரும் பேருந்து, வரட்டுபாறை எஸ்டேட் பகுதியில் பழுதாகி நின்றது. மாற்றுப் பேருந்து இல்லாமல் பேருந்து பழுது சரி செய்ய முடியாமலும் சிரமப்பட்டனர்.



இதனால் பள்ளி குழந்தைகள் 9 மணி அளவில் பள்ளிக்கு வர முடியாமல் சிரமப்பட்டனர். பின்பு அதே வழியில் வேறு எஸ்டேட்டில் இருந்து வந்த பேருந்தில் பள்ளி மாணவிகளை ஏற்றி இட நெரிசலில் பேருந்தில் ஏற்றி வரப்பட்டனர். எஸ்டேட் மலைப்பகுதி என்பதால் வனவிலங்குகள் தொந்தரவும், விடாமல் பெய்யும் மழை காரணமாகவும் பேருந்து சரியான முறையில் சரி செய்து பயணிகளுக்கு சேவை செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...