கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு என தனி வார்டு; சுத்தமான குடிநீர் பருக வேண்டும் - டீன் நிர்மலா தகவல்.

கோவையில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, வைரஸ் காய்ச்சல் மற்றும் நீர் தேக்கத்தால் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால், கோவை அரசு மருத்துவமனையில், காய்ச்சல் சிகிச்சைக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது, என கோவை அரசு மருத்துவமனை டீன் மருத்துவர் நிர்மலா தெரிவித்துள்ளார்.


கோவை: மழைக்காலங்களில் பாதுகாப்பற்ற உணவு உட்கொள்வதாலும், அசுத்தமான குடிநீர் குடிப்பதாலும், சளி மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று தெரிவித்த அவர், மழை நீர் தேக்கத்தால் கொசு உற்பத்தி அதிகரிப்பால் மலேரியா, டெங்கு காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது என்று டீன் நிர்மலா எச்சரித்துள்ளார்.

தற்போது, இந்த பருவமழையால் ஒரு நாளுக்கு 3 லிருந்து 6 பேர் வரை வைரஸ் காய்ச்சலுக்கு சிசிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். தொடர்ந்து, வரும் நாட்களில் நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு என்று ஒரு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது, என்றார்.

தேவைப்பட்டால் கூடுதல் அறைகள் துவக்கப்படும். காய்ச்சல் சிகிச்சைக்காக தேவையான மருந்து பொருட்கள் இருப்பு உள்ளதா? பரிசோதனை கருவிகள் முறையாக செயல்படுகிறதா? என ஆய்வு மேற்கொள்ள மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.

முக்கியமாக, காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் சுயமாக மருத்து உட்கொள்ளாமல், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்க வேண்டும்,என்று டீன் மருத்துவர் நிர்மலா அறிவுறுத்தியுள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...