பல்லடம் அருகே பொங்கலூரில் பிஏபி வாய்க்காலில் கால்கள் மற்றும் கழுத்து கயிற்றால் கட்டப்பட்டு மிதந்து வந்த ஆண் சடலம் மீட்பு..!

இதையடுத்து, அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து அவிநாசிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: பல்லடம் அருகே பொங்கலூரில் பிஏபி வாய்க்காலில் கால்கள் கழுத்து கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் மிதந்து வந்த ஆண் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்கலூர் சேமலைகவுண்டன்பாளையம் முதியா நெரிசலில் பிஏபி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த வாய்க்காலில் நேற்று மாலை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் குளித்துக் கொண்டும், துணிகளை துவைத்துக் கொண்டும் இருந்தனர்.

அப்போது, வாய்க்கால் தண்ணீரில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கால்கள் மற்றும் கழுத்துப் பகுதி கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் மிதந்து வந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் இதுகுறித்து அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.



இதனையடுத்து, சம்பவ இடம் விரைந்து சென்று அவிநாசிபாளையம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் வாய்க்காலில் சடலமாக மிதந்து வந்தது திருப்பூரை சேர்ந்த விஸ்வநாதன் (45) என்பதும் அவர் அங்குள்ள பனியன் நிறுவனத்தில் கட்டிங் மாஸ்டராக வேலை செய்து வந்ததும், இவருக்கு தவமணி என்ற மனைவியும், கார்த்திகேயன் என்கின்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை விஸ்வநாதன் தனது வீட்டில் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்யப் போவதாகவும், என்னை யாரும் தேட வேண்டாம் என்றும் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி விட்டு மாயமானதாகவும் அவரது குடும்பத்தினர் இன்று காலை முதல் தேடி வந்த நிலையில், பொங்கலூர் அருகே பிஏபி வாய்க்காலில் கால்கள் மற்றும் தலை பகுதியை கயிற்றால் கட்டி இருந்த நிலையில் சடலமாக போலீசாரால் மீட்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து அவிநாசிபாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...