பொள்ளாச்சியில் நீட் தேர்வில் வெற்றிபெற்ற பழங்குடியின மாணவருக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று பாராட்டு!
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நீட் தேர்வில் வெற்றிபெற்ற பழங்குடியின மாணவருக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று பாராட்டு தெரிவித்தார்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆத்து பொள்ளாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்த நிலையில், இந்த ஆண்டு மீண்டும் நீட் தேர்வு எழுதியுள்ளார்.
தேர்வு முடிவுகள் வந்த நிலையில் 406 மதிப்புகள் எடுத்து மருத்துவ படிப்புக்குத் தகுதி பெற்றுள்ளார். இந்நிலையில், பொள்ளாச்சியில் பல்வேறு பகுதிகளில் மக்கள் சபை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆகியோர் ஆத்து பொள்ளாச்சி கிராமத்திற்கு நேரில் சென்று, நீட் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவர் ராதாகிருஷ்ணனைச் சந்தித்து, அவருக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
மேலும் அவருக்கு மருத்துவ படிப்பிற்குத் தேவையான உதவிகளும் செய்து தரப்படும் என்றும் அமைச்சர் உறுதி அளித்தார். அமைச்சரின் திடீர் வருகையால் மாணவர் மற்றும் அவரின் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.