கோவை தடாகம் காப்புக்காடு பகுதியில் பள்ளத்திற்குள் விழுந்த ஆண் யானை பத்திரமாக மீட்பு..!

கோவை பெ.நா.பாளையம் வனச்சரகம், தடாகம் காப்புக்காடு அருகிலுள்ள CRPF கேம்பஸ் பகுதிக்குள் வந்த ஆண் யானை மழையினால் பள்ளத்திற்குள் வழுக்கி விழுந்தது.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், தடாகம் காப்புக்காடு, நாயக்கன்பாளையம் தெற்கு சுற்று அருகிலுள்ள CRPF கேம்பஸ் பகுதிக்குள் வந்த ஒரு இளம் வயது ஆண் யானை ஒன்று மழையினால் பள்ளத்திற்குள் வழுக்கி விழுந்தது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த, பெ.நா.பாளையம் வனச்சரக களப் பணியாளர்கள் உடனடியாக சென்று, பொக்லைன் உதவியுடன்,பள்ளத்தை சீர்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர்,முதுமலை புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் கோவனூர் கால்நடை உதவி மருத்துவர், வெற்றிவேல் ஆகியோர் அந்த யானைக்கு சிகிச்சை அளித்தனர். இயந்திர உதவியால், யானை தானாக எழுந்து புதர் பகுதிக்குள் சென்றது.

யானையை கண்காணித்த வனத்துறையினர், யானை தற்போது நன்றாக உள்ளதாகவும், வனப்பகுதியில் மேய்ந்து வருகிறது எனவும் தொடர்ந்து வன களப்பணியாளர்கள் தொலைவில் இருந்து யானையை கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...