கோவை வந்த பீகார் விரைவு ரயிலில் கஞ்சா கடத்தல்; வாலிபரை மடக்கிப் பிடித்த ரெயில்வே பாதுகாப்பு படை நடவடிக்கை

இன்று காலை பீகார் மாநிலம், பாட்னாவில் இருந்து கேரள மாநிலம், எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயில் (02644), கோவைக்கு வந்த போது, சோதனையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த நபர் கஞ்சா கடத்தியதற்காக கைது.


கோவை: கோவையில் ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்த பீகார் இளைஞரை, ரயில்வே பாதுகாப்பு படையினர் இன்று கைது செய்தனர்.

வெளி மாநிலங்களில் இருந்து விரைவு ரயில்களில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் கார்த்திகேயன் உதவி ஆய்வாளர், குற்ற புலனாய்வு துறை, இரயில்வே பாதுகாப்பு படையினர் தலைமையில், ரெயில்வே போலீஸ் படையினர் இன்று பீகார் மாநிலம், பாட்னாவில் இருந்து கேரள மாநிலம், எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயிலில் (02644), காலை 10.30 மணியளவில் கோவை ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, முன்பதிவு பெட்டியில் (S-4) இருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் பீகார் மாநிலம் கட்டிஹார் மாவட்டத்தைச் சேர்ந்த பிஷேஷ் குமார் யாதவ் (26) என்பதும், இவர் ரயிலில் கேரளாவுக்கு கஞ்சா கடத்திச் செல்வதும் தெரியவந்தது.

அவரிடமிருந்து சுமார் 1.5 கிலோ அளவிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை கோவை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ரயில்வே பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனா்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...