கோவையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 50 லட்சம் மோசடி - போலி பணி நியமன ஆணை வழங்கிய டிராவல்ஸ் உரிமையாளர் கைது..!

கோவையில் அரசுப் பணிக்கு போலி ஆணை வழங்கி, 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த டிராவல்ஸ் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் போலியான நியமன ஆணை வழங்கி 50 லட்சம் மோசடி செய்த டிராவல்ஸ் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் அரசுப் பணிக்கு போலி ஆணை வழங்கி, 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த டிராவல்ஸ் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் லோகேஷ் அரவிந்த் (28). இவருக்கு மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் மோகன் (40), என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மோகனுடைய உறவினர் ஒருவர், அரசு பணியாளர் தேர்வாணையத்தில் அதிகாரியாக பணியாற்றி வருவதாக லோகேஷ் அரவிந்திடம் தெரிவித்துள்ளார்.

மேலும், வேளாண்துறையில் அலுவலக உதவியாளர் பணிகள் காலியாக இருப்பதாகவும் பணம் கொடுத்தால், உறவினரிடம் தெரிவித்து வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார்.

இதை நம்பிய லோகேஷ் அரவிந்த் 18 பேரிடமிருந்து, 50 லட்சம் ரூபாய் வசூல் செய்து மோகனிடம் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்ற மோகன், பணிக்கான போலி ஆணைகளை தயார் செய்து கொடுத்துள்ளார். இந்த ஆணையுடன் பணிக்கு சென்றபோது, ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என தெரியவந்தது.

இது குறித்து, கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மோகனை கைது செய்து விசாரித்தனர்.

அவரிடம் இருந்த, ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மீட்கப்பட்டது. இதில், தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...