பொள்ளாச்சி அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட டிரைவரை தேடும் பணி தீவிரம்..!

காளியப்பகவுண்டன்புதூர் வழியாக செல்லும் ஆழியார் ஆற்றுப் பாலத்தின் அருகே அமர்ந்து கொண்டிருந்தபோது தவறி ஆற்றுக்குள் விழுந்தவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள காளியப்பகவுண்டன்புதூரில், ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட டிரைவரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள காளியப்பகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (45), ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இவர் நேற்று காளியப்பகவுண்டன்புதூர் வழியாக செல்லும் ஆழியார் ஆற்றுப் பாலத்தின் அருகே அமர்ந்து கொண்டிருந்தபோது, தவறி ஆற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது.

தொடர் மழை காரணமாக, ஆழியார் ஆற்றில் வெள்ளம் அதிகளவில் செல்வதால், ஆற்றுக்குள் விழுந்த கந்தசாமி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அருகில் இருந்த பொதுமக்கள் சிலர் ஆனைமலை போலீசாருக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு வீரர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட கந்தசாமியை தேடி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...