வனத்துறையினர் காட்டு யானைகளை குடியிருப்பு பகுதியில் விடாமல் பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கோவை: வால்பாறை அருகே காட்டு யானைகள் மளிகை கடையை உடைத்து சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. செப்டம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை வால்பாறை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் யானைகள் காணப்படும் யானைகளில் இனபெருக்க காலங்களிலும் உணவு அதிகமாக இருக்கும் நேரங்களில் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதியில் யானைகள் வருகிறது.
இந்த நிலையில், வால்பாறை அருகே மழுகப்பாறை எஸ்டேட் பகுதியில் நேற்று இரவு 7 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து முகமது என்பவர் மளிகை கடையை உடைத்து ஜன்னல் கதவுகளை உடைத்து உள்ளே இருந்த உணவுப் பொருட்களை தின்று சேதப்படுத்தியது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.

அதேபோல் அக்காமலை எஸ்டேட் பகுதியில் சுற்றித்திரிந்த 3 காட்டு யானைகள் அங்குள்ள எஸ்டேட் அலுவலகத்தை உடைத்து சேதப்படுத்தியது.
காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் காட்டு யானைகளை குடியிருப்பு பகுதியில் விடாமல் பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.