நீலகிரியில் அடுத்தவர் வீட்டுக்குள் ஆடையின்றி புகுந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மீது தாக்குதல்!

நீலகிரி மாவட்ட முன்னாள் அதிமுக எம்பி மது போதையில் தீபாவளியன்று அடுத்த வீட்டிற்குள் ஆடையின்றி இருந்த சம்பவம் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



நீலகிரி: நீலகிரி மாவட்ட முன்னாள் அதிமுக எம்பி மது போதையில் தீபாவளியன்று அடுத்த வீட்டிற்குள் ஆடையின்றி இருந்த சம்பவம் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் நீலகிரி தொகுதி மக்களவை எம்.பியாக இருந்தவர் கோபால கிருஷ்ணன். இவர் நகராட்சி தலைவராகவும் இருந்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இவருக்கு எம்பி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை வழங்கினார்.

இந்நிலையில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னாள் அதிமுக எம்பி கோபாலகிருஷணன் மது போதையில் முத்தாலம்மன் பேட்டை பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டிற்குள் புகுந்ததாகக் கூறப்படுகிறது.

உடனடியாக அந்த வீட்டின் உரிமையாளர்கள் முன்னாள் எம்பியை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவர் வீட்டுக்குள் ஆடையின்றி இருப்பதை அவர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர்.

உடனடியாக குன்னூர் நகர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். முன்னாள் அதிமுக எம்பி தன்னை தாக்கியதாக கூறி குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து இருவரையும் விசாரணை நடத்திய காவல்துறையினர் வீட்டிற்குள் ஆடையின்றி இருந்த முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் மீதும் அவர் மீது தாக்குதல் நடத்திய வீட்டின் உரிமையாளர் கோபி மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...