கோவையில் திருட்டு சம்பவம் குறித்து தகவல் அளித்த பெண்ணுக்கு டி.ஐ.ஜி.முத்துசாமி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து இனிப்பு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினார்.
கோவை: கோவையில் திருட்டு சம்பவம் குறித்து தகவல் அளித்த பெண்ணுக்கு டி.ஐ.ஜி.முத்துசாமி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து இனிப்பு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினார்.
கருமத்தம்பட்டி அடுத்த செந்தில் நகர் பகுதியைச் சேர்ந்த நிர்மலா வயது 40, என்பவரின் வீட்டில் கடந்த 1ஆம் தேதி இரவு புகுந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து கொள்ளை அடித்துக் கொண்டிருந்தனர்.
அந்த சத்தத்தைக் கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மனைவி கோமதி வெளியே வந்து பார்த்தார். அப்போது மர்ம நபர்கள் கதவை உடைத்து கொண்டிருப்பது பற்றி தெரிந்து கொண்ட அவர் உடனடியாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு கொள்ளையடித்துக் கொண்டிருந்த முன்னாள் ஆயுதப்படை போலீஸ்காரர் ஆன முரளி ஈஸ்வரன் என்பவரைப் பொதுமக்களுடன் சேர்ந்து கையும் களவுமாக பிடித்தனர்.
மற்றொரு நபர் தப்பிச் சென்றார். இதனையடுத்து திருட்டு சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்ததற்கு வாழ்த்து தெரிவிக்க டிஐஜி முத்துசாமி சம்பவம் நடந்த பகுதிக்கு நேரில் வந்தார்.

அவர் திருட்டு சம்பவம் குறித்து தகவல் அளித்த கோமதி மற்றும் குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்து இனிப்பு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினார்.