தனியார் நிறுவன ஊழியரிடம் கஞ்சா கேட்டு டாஸ்மாக் கடையில் தகராறு செய்து கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யட்டநிலையில், ஒருவர் தப்பி ஓட்டம்.
கோவை: தனியார் நிறுவன ஊழியரிடம் கஞ்சா கேட்டு டாஸ்மாக் கடையில் தகராறு செய்து கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யட்டநிலையில், ஒருவர் தப்பி ஓட்டம்.
கோவை அருகே உள்ள சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார் வயது 27, தனியார் நிறுவன ஊழியர் நேற்று இவர் காமராஜர் நகர் முனியப்பன் கோவில் வீதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது குடிப்பதற்காகச் சென்றார்.
மது குடித்துக் கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த மார்த்தாண்டம் 21, கண்ணன் ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் பிரேம்குமார் இடம் கஞ்சா கொடுக்கும்படி கேட்டனர். அப்போது அவர் தன்னிடம் கஞ்சா இல்லை எனக் கூறி உள்ளார்.
இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மார்த்தாண்டம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரேம்குமாரின் தலை, மற்றும் கழுத்தில் குத்தினார். கண்ணன் அங்கிருந்து பீர் பாட்டிலை உடைத்து அவரது தலையில் தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து பிரேம்குமார் போத்தனூர் போலீசில் புகார் தெரிவித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் நிறுவன ஊழியரைத் தாக்கிய காமராஜர் நகரைச் சேர்ந்த மார்த்தாண்டத்தைக் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கண்ணனைத் தேடி வருகின்றனர்.