வால்பாறையில் கரடியை பார்த்து பயந்து ஓடிய பெண்!

வில்லோனி எஸ்டேட் பகுதியில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரடியை பார்த்து பயந்து அலறியடித்து ஓடிய பெண் கால் இடறி கீழே விழுந்ததில், கை மற்றும் காலில் சிறு காயம் ஏற்பட்டது.


வால்பாறை: வில்லோனி எஸ்டேட் பகுதியில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரடியை பார்த்து பயந்து அலறியடித்து ஓடிய பெண் கால் இடறி கீழே விழுந்ததில், கை மற்றும் காலில் சிறு காயம் ஏற்பட்டது.

வால்பாறை அருகே உள்ள வில்லோனி எஸ்டேட் பகுதியில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை 11-மணியளவில் அங்குள்ள 17-ஆம் நம்பர் தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு இரை தேடி வந்த கரடி ஒன்று திடீரென தேயிலைத் தோட்டப் பகுதியில் நடமாடியது. அதைப் பார்த்த அருகில் நின்ற அருள்மேரி (வயது 48) என்ற தொழிலாளி கரடி நம்மை தாக்கி விடுமோ? என பயந்து அலறியடித்து ஓடியுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர் கால் இடறி கீழே விழுந்ததால், கை மற்றும் காலில் சிறு காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த மற்ற தொழிலாளர்கள் அவரை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர்.

அங்கு அவர் சிகிச்சைக்குப் பின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையிலான வனத்துறையினர் காயமடைந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறி கரடி நடமாடிய பகுதியில், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...