கோவையில் பண்டிகை கூட்டம்: தொற்று பாதிப்பு அதிகரித்து உள்ளதா? சுகாதாரத்துறை சார்பில் தீவிர கண்காணிப்பு.!

தீபாவளி பண்டியையொட்டி கடைவீதிகளில் கூட்டம் அதிகரித்த நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து உள்ளதா? என்பது குறித்து இன்னும் ஒரு வாரம் கடந்த பின்னர் தான் தெரியவரும் என்பதால், மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள திட்டம்.


கோவை: தீபாவளி பண்டியையொட்டி கடைவீதிகளில் கூட்டம் அதிகரித்த நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து உள்ளதா? என்பது குறித்து இன்னும் ஒரு வாரம் கடந்த பின்னர் தான் தெரியவரும் என்பதால், மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள திட்டம்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 120 பேர் முதல் 130 பேர் வரை மட்டுமே கொரோனா தொற்று ஏற்படுகிறது. இதனிடையே தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடைகள், பொருட்கள் வாங்கக் கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் குவிந்தது.

இதனால் கொரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கொரோனா பரிசோதனைகள் மற்றும் கொரோனா விதிமீறல்கள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவை கடைத்தெருக்களில் தீபாவளி பண்டியையொட்டி கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. இக்கூட்டத்தால் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து உள்ளதா? என்பது குறித்து இன்னும் ஒரு வாரம் கடந்த பின்னர் தான் தெரியவரும்.

எனவே இந்த மாத இறுதி வரை மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும்.

இதன் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களை விரைந்து தனிமைப்படுத்தப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...