கோவை மதுக்கரை அருகே மதுபோதையில் இருந்தவர் பாம்பு கடித்து பலி..!

கோவை மதுக்கரையை அடுத்த அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்த மயில்சாமி (32) என்பவர் பாம்பு கடித்து பலியானார்.


கோவை மதுக்கரையை அடுத்த அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்த மயில்சாமி (32), பெயிண்டர் ஆன இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

நேற்று அதிகாலை இவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்தது. அந்த சமயத்தில் குடிபோதையில் இருந்த மயில்சாமி, அந்த பாம்பை பிடித்து வீட்டிற்கு வெளியே கொண்டு போய் விட்டார். அப்போது, எதிர்பாரதவிதமாக அந்த பாம்பு, மயில்சாமியை கடித்தது.

இதையடுத்து, மயில்சாமி சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்தார். இதை பார்த்த, அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் மயில்சாமி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அவரது மனைவி, யோகசுந்தரி மதுக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...