கோவையில் நரகாசுரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி!

தீபாவளியைக் கொண்டாடக் கூடாது என்பதை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே மாவீரன் நரகாசுரன் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடத்தப்படுவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தெரிவித்தார்.



கோவை: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நரகாசுரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை காந்திபுரம் தந்தை பெரியார் திராவிட கழகத்தின தலைமை அலுவலகத்தில் நரகாசூரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழர்களின் மூதாதையரான நரகாசுரன் இறப்பு கொண்டாடப்படக்கூடிய விழா அல்ல எனவும், வீர வணக்கம் செலுத்தக்கூடிய நாள் என குறிப்பிட்டார்.



மேலும் தமிழ் வம்சாவளி வந்த மன்னனின் இறப்பிற்கு வீரவணக்கம் செலுத்தும் நாளை தமிழர்களே வெடி வைத்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடக் கூடாது என தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் வலியுறுத்தினார்.



ஆண்டுதோறும், தீபாவளியைக் கொண்டாடக் கூடாது என்பதைப் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே மாவீரன் நரகாசுரன் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து மாட்டுக்கறி பிரியாணியை அனைவருக்கும் வழங்கினர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...